பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போக முனிவர் நோய்களுக்கான விதிமுறைகள் அடங்கிய நூலை மூன்று காண்டங்களாக பாடியுள்ளார். அவற்றின் ஒரு பிரிவுதான் இந்த சித்தாதி லேகியம். இதன் மூலம் குணமாகும் நோய்கள் பாண்டு , சோகை , பெரு வ்யிறு , பீலி , பித்தம் , கிராணி, காமாலை சித்த மருத்துவ முறையின் மூலம் குணமாக்க முடியாத அனைத்திற்கும் நிவாரணம் கிடைக்கும். ஆனால் இவற்றை பயன்படுத்துவதில் சுயநலம் இருக்க கூடாது. பணம் சம்பாதிக்கும் எண்ணமும் இருக்க கூடாது.
இந்த லேகிய தயாரிப்பை எனது பிளாக்கில் எழுதுவதன் நோக்கமே அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் . ஆனால் லேகியம் பற்றி எழுத ஆர்வமூட்டியவர் Abdul Farook.
செய்முறை :
- நூறு பலம் கொண்ட எடைக்கு புளிய இலையை எடுத்துக்கொள்ளவும். உலர்ந்த நீர்முள்ளி , கரிசாலை , கீழ்க்காய் நெல்லி, ஆகியவற்றை வகைக்கு பத்து வீதம் எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகப் போட்டு இடித்துத் தூள் செய்து ஒரு பாத்திரத்தினுள் போடவும்
- பாத்திரத்தினுள் போட்டவுடன் பதினாறு மரக்கால் அளவு தண்ணீரை விட்டு நன்றாக கலக்கவும். துருப்பிடித்த இரும்பைத் தீட்டி அதன் தூளை சேர்த்து காய்ச்சவும். எட்டில் ஒரு பங்காய் ஒன்றாய் சுண்டியதும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் ஒரு படி நல்லெண்ணெய் , எலுமிச்சை பழச்சாறும் விடவும். பின் வெள்ளாட்டு பால் வகைக்கு ஒரு படியும் ஊற்றவும்.
- அதன் பிறகு ஒரு படி நெல்லிக்காய் சாறு , ஒரு படி முசு முசுக்கை சாறு , பேய்க் குமட்டிச் சாறு , மாதுளையின் சாறு இவற்றுடன் கற்றாழை , பிரமி, இஞ்சிச் சாறு இவற்றையும் கலந்து பொங்கச் செய்யவும்.
- பழைய பனை வெல்லம் பத்து பலம் எடுத்து அதில் கரைத்திடவும். பிறகு மீண்டும் அடுப்பில் ஏற்றி எரிக்கவும்.
- கலவை குழைந்து குழம்புப் பதம் வரும்வரை பார்த்திருக்கும்.பின் திரிகடுகு, திரிபலாதி, கருஞ்சீரகம் , கிராம்பு , ஏலக்காய் , தாளிசை , ஓமம் , மரமஞ்சள் , சிங்கி, அதிமதுரம், சாதிக்காய், மஞ்சி , நாகப்பூ, கடுகரோகணி ஆகியவற்றுடன் விளாவரிசி , காட்டத்திப் பூ , வெட்பாலை , அரிசி, சந்தனம் , அத்தி , திப்பிலி, நெற்பொரி , திப்பிலி மூல்ம் தூதுவளை முட்கா வேளை ஆகியவற்றின் வேர்கள் வகை ஒன்றுக்கு கால் பலம் வீதம் எடுத்துக்கொள்ளவும்.
- எடுத்துக்கொண்ட வேர்கள் அனைத்தையும் இளவறுப் பாய் வறுத்து இடித்து சூரணமாக்கி பாலூடன் கலக்கவும். ஆயிரம் ஆண்டுக்கு முன்பான மிகப் பழமையான திட்டம் நாலூ பலம் வாங்கி சுத்தி செய்து இடித்துப் பொடி செய்து மேல் சொன்னவற்றுடன் கலக்கவும். பிறகு அடுப்பில் ஏற்றிக் காய்ச்சும் போது மெழுகுப் பதம் வரும் வரை கிண்டி விடவும்.
- மெழுகுப் பதமாகி லேகியமாய் இறக்கிக் கொள்ளவும். பிறகு லேகியத்தை முறைப்படி தானியப் புடமிட்டு பத்திரப்படுத்தவும். விநாயகர் அடிபணிந்து நாள் ஒன்றுக்கு காலை , மாலை வேளைகளில் கொட்டைப் பாக்களவு எடுத்து ஒரு மணடலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
- குணமாகும் நோய்கள் : பாண்டு , சோகை , பெருவயிறு , பீலி, பித்தம், கிராணி போன்ற அனைத்தும் குணமாகும்.
1 comment:
Dear Karthik,
Your postings are awesome and great effort in imparting our old tamil medicine to mass community. It is rare to find these legiyams in books.
Kindly replace with new words also for measurements and some terminolgoy that everybody can understand.
Keep up good work.
Thanks
Post a Comment