வில்வப்பழம் இருதயத்துக்கு வலுவூட்டுகிறது. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கும்.
வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.
இறைவன் அனைத்து நபிமார்களையும் வில்வப்பழத்தை சாப்பிட வைத்துள்ளான். ஏனென்றால் வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது. இதைச்சாப்பிடு பவர்களுக்கு 40 மனிதர்களின் சக்தி ஒருவருக்கே கிடைக்கிறது. கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் அவர்களின் இருதய நோய் நீங்கும். பிறக்கும் ஆண் குழந்தை அழகாக இருக்கும்.
வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும் என்று ஜாமிஃகபீரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். மூத்திரத்தை வெளியாக்குவதுடன் தாய்ப் பாலையும் அதிகரிக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும். சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கரைக்கவும்,சுருள்களை அவிழ்க்கவும் வில்வப்பழம் பயன்தரும். இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம்தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.
மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர். இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன. விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள். இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள்.
கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.
அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது. நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.
1 comment:
அருமையான பதிவு! இந்த அற்புத விருட்சம் இன்னும் சிவனின் ரகசியத்தோடும் தொடர்புடையது, உங்கள் பதிவிலுருந்து இன்னோரு பரிமாணம் இன்று புரிந்து கொண்டேன். இஸ்லாத்திலும் இறைமகிமைக்குரியதாய்ச் சொல்லப்படுகிறது என்பதை. நன்றி.
Post a Comment